பெரம்பலூர் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

 
பெரம்பலூர் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய 30 வயது மதிக்கதக்க ஆண் சடலத்தை மீட்ட போலீஸார் இறப்புக்கு காரணம் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பெரம்பலூர் அருகே எசனை ஏரிக்கரையையொட்டிய அரசலூர் சாலையில் வனப்பகுதியில்சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து  சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீஸார்    மரக்கிளையில் நைலான் கயிற்றினால் தூக்கிட்டு தொங்கியபடி இருந்த இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.  தூக்கில் தொங்கிய பிரேதத்தின் அடியில் இருந்த கருப்பு நிற பையை சோதனையிட்டதில் மர்மமாக தூக்கில் தொங்கிய நபர் வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த முகமது சலீம் என்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து மீட்க்கப்பட்ட முகமது சலீமின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே மரக்கிளையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நபர்  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேப்பந்தட்டை அருகேயுள்ள  V.களத்தூர் கிராமத்தில் கோயில் தேரை தீயிட்டு கொளுத்த முயற்சி செய்து அப்போது பொதுமக்களால் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது  யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்