என்னை எதிர்த்து போட்டியிட தயாரா?? - அண்ணாமலைக்கு காயத்ரி சவால்..

 
காயத்ரி ரகுராம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்திருக்கிறார். ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என்று அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார். 
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏறுக்கொள்வீர்களா?
 அண்ணாமலை
நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று குறிப்பிட்டுள்ளார்.