ரேஷன் கடைகளில் ரூ. 1000 பொங்கல் தொகுப்பை இன்றும் பெறலாம்..

 
1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு…

ரேஷன் கடைகளில் தொடர்ந்து ரூ. 1000 ரொக்கம், பொங்கல் பரிசு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்றவர்கள் பெற்றுக்கொள்ள வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை  ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் , தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரசு சார்பில் ரூ.1000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.  சுமார்  2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.  இந்த 5 நாட்களில்  இதுவரை  92 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டுவிட்ட நிலையில்,  ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இந்நிலையில் இன்று  முதல் மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.

மகளிருக்கு மாதம் ரூ. 1000 ...  பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பார்.. - பிடிஆர் தகவல்..

பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் , அவர்கள்  வாங்க ஏதுவாக இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.  பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும், இதுவரையில் வாங்காமல் இருந்தால் அவர்கள் இன்று முதல் வாங்கிக் கொள்ளலாம் என்றும்  சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும், ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், அதனால் தொடர்ந்து வினியோகித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.