ராணிப்பேட்டை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 
t

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கனமழையின் காரணமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. 

s

 வலுவிழந்து மத்திய மேற்கு அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகின்றது.   இதனால் இன்றும் நாளையும் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் .  தென் தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 தொடர்  கனமழையின் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.  மாவட்ட முழுவதிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது .  இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.