இராமசாமி படையாச்சியார் 105-வது பிறந்தநாள் - ஈபிஎஸ் மரியாதை!!

 
tn

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின்  105வது பிறந்தநாளை முன்னிட்டு ஈபிஎஸ் மரியாதை செலுத்தினார். 

tn
1952 முதல் 1962 வரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றி,தமிழக அரசியலில் தன்னுடைய ஆழமான முத்திரையைப் பதித்தவர் இராமசாமி படையாச்சியார் .  1954 முதல் 1957 வரை உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணிபுரிந்து பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவரும் இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர். கடலூர் நகராட்சி மன்றத்தின் தலைவராகவும், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவராகவும், பல்வேறு சமூகப் பொது நல நடவடிக்கைகளில் பங்கு கொண்டு நாட்டிற்காக உழைத்தவருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியாரின் 105ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

“முதல்வர் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுவாரா?” – கேட்கும் எடப்பாடி மக்கள்! #edappadi

இந்நிலையில் சுதந்திரப்போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களது 105வது பிறந்தநாளையொட்டிஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மரியாதை செலுத்தினார். சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் புகைப்படத்திற்கு ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஈபிஎஸ்.