ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல்

 
r

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நிலை குறித்து அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

 அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் 13 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.   இதை அடுத்து அந்த 13 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்தனர்.  இதற்காக அனுமதி கேட்டு திருச்சி ஜே. எம். 6 நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்தனர் .  

k

இந்த மனு மீதான விசாரணையின் போது 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.  சண்முகம் என்பவரை தவிர 12 பேரும் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.   இதை அடுத்து 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது.  அந்த மருத்துவ அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.  

இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நிலை குறித்து அறிக்கை சீலிடப்பட்ட கவரில் வைத்து  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பு புலனாய்வு குழுவினர் சார்பில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.