ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரம்ஜான் வாழ்த்து செய்தி

 
Aavin

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரம்ஜான் வாழ்த்துச் செய்தி அச்சடிக்கப்பட்டு ஆவின் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து, இஸ்லாம், கிருத்துவம் என அனைத்து மதப் பண்டிகைகளுக்கும் ஆவின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் கொண்டாடப்படும் நிலையில் அனைத்து ஆவின் நிலையங்களிலும் ரமலான் வாழ்த்து செய்தி அச்சடிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. 

aavin

பால் பாக்கெட்டுகளில் "இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்" என அச்சடிக்கப்பட்டு அனைத்து ஆவின் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இஸ்லாமியர்கள் நாள்காட்டியில் ஒன்பதாவது மாதம் ரமலான் மாதமாக கருதப்படுகிறது ஈகை திருநாளான ரமலான் பண்டிகை இன்று இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரமலான் வாழ்த்து செய்தி பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் ஆவின் பால் இருவது முதல் இருவத்தி ஆறு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.