ராஜீவ் கொலை- 6 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு மனு

 
rajivgandhi murder

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுவிக்கபட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி விடுதலை செய்யப்பட்டனர். இதில் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களை உடனடியாக அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்ப முடியாத என்கிற காரணத்தாலும் வெளியில் எங்கும் அவர்களை தங்க வைக்க முடியாது என்பதாலும் போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அவர்கள் நால்வரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரையும் விடுவிக்க கடந்த 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.