தன்னை பாதுகாப்பாக அழைத்து சென்ற காவலர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

 
ரஜினி

பத்திரமாக அழைத்து சென்ற நுங்கம்பாக்கம் காவல்  உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறைக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

ரஜினி

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நேற்று நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா பங்கேற்றனர். அவர்களை போயஸ்கார்டன் வீட்டில் இருந்து நிகழ்ச்சி நடந்த இடம் வரை பாதுகாப்பாக அழைத்து மீண்டும் வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக சிறப்பு கான்வாய் காவல்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ரஜினி

நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் ரவி அபிராம் உத்தரவின் பேரில் நுங்கம்பாக்கம்  உதவி ஆய்வாளர் மருது தலைமையிலான காவல்துறையினர் கான்வாய் மூலம் நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் இருந்து பத்திரமாக அழைத்து சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி ஆய்வாளர் மருது மற்றும் காவலர்களை பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.