"நீண்ட நாட்களுக்கு பிறகு என் நெருங்கிய நண்பருடன் சந்திப்பு" - ரஜினிகாந்த் ட்வீட்!

 
tttn

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர்  திரைப்படத்தில் நடித்து வருகிறார்.   இப்படத்தின் படப்பிடிப்புகள் சுமார் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் ஐதராபாத்தில் தற்போது  மீண்டும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் - சந்திரபாபு நாயுடு

இந்நிலையில் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில்  உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.  அப்போது சந்திரபாபு நாயுடு அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றுள்ளார்.மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு கேட்றிந்ததாக  தெரிகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,  நீண்ட நாட்கள் கழித்து தனது நெருங்கி நண்பரை சந்தித்ததாகவும்,  அவருக்கு நல்ல உடல் நலனும்,  சிறந்த அரசியல் வாழ்வும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சந்திரபாபு நாயுடு , என் அன்பு நண்பர் தலைவர் ரஜினிகாந்தை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.