ரஜினி மக்கள் இயக்க நிர்வாகி மரணம்

 
tn

நடிகர் ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் இயக்கத்தின் நிர்வாகியாக இருந்த சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

 

rajini

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக பதவி வகித்து வந்தவர் சுதாகர். இவர் நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி வி.எம். சுதாகர் இன்று காலை உயிரிழந்தார்.

tn

இது குறித்து ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி திரு.சுதாகர் அவர்கள் உடல்நல குறைவால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு வட சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.