ரூ. 6.5 கோடி செலவில் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ராஜகோபுரம் - அரசாணை வெளியீடு

 
govt

கடந்த மே மாதம் 4ம் தேதி சட்டமன்ற பேரவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையின் போது இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு , கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் ரூபாய் 5.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று அறிவித்தார்.  வனபத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் புதியதாக ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் திருப்பணி திருக்கோவில் நிதி மூலம் ரூபாய் 3.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.  திருக்கோவிலின் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணியினை மேற்கொள்ள குறைந்த ஒப்பந்த புள்ளி தொகையாக ரூ.2 கோடியே 86 லட்சத்து 31 ஆயிரத்து 93 ரூபாய்க்கு அளித்துள்ள ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு ஒப்பந்த புள்ளி அளிக்கும் வகையில் ஒப்பந்த புள்ளி அங்கீகாரம் அளித்து ஆணையிடப்பட்டது.

tn govt
திருக்கோவிலின் ஏழு நிலை ராஜகோபுரம் பணியில் மீதமுள்ள பணிகளுக்கு வடிவமைப்பு கணக்கீடுகளுக்கு ஏற்றவாறு மதிப்பீட்டின் அளவுகள் சரிபார்க்கப்பட்டு 2022-23 ஆம் ஆண்டின் விலை விகிதபடி 5 கோடியே  30 லட்சத்துக்கு திருத்தி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தொகையான 6 கோடியே 53 லட்சத்து 93 ஆயிரத்து 395 இறுதி செய்தி ஒப்புதல் வழங்கி திருக்கோவில் நிதிமூலம் மேற்கொள்ள தீர்மானம் இயற்றப்பட்டது. இந்நிகழ்வில் திருக்கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள உபயதாரர்கள் முன்வந்துள்ளதால் இறுதி செய்யப்பட்டுள்ள மதிப்பீட்டுத் தொகை 6 கோடியே  53 லட்சத்து 93 ஆயிரத்து 395 யை உபயத்தாரர்  நிதி மூலம் பணி மேற்கொள்ள திருத்திய நிர்வாக அனுமதி மற்றும் மதிப்பீடு அங்கீகாரம் வழங்குமாறு ஆணையர் அரசை கோரியுள்ளார்.

sekar babu

இந்து சமய அறநிலைத்துறை ஆணையரின் செயற்குறிப்பினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து,  பரிசீலனைக்கு பின்னர் அதை ஏற்று 2022 -23 ஆம் ஆண்டுக்கான மாநில கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு,  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி அருள்மிகு மாணவன் பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் புதிதாக ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணியில் மீதமுள்ள பணிகளுக்கான இறுதிசெய்யப்பட்டுள்ள மதிப்பீட்டு  தொகை 6 கோடியே  53 லட்சத்து 93 ஆயிரத்து 395 ரூபாய் உபயத்தாரர் நிதி மூலம் பணியினை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.