ஆளுநரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது ... திமுக பேச்சாளர் மீது ராஜ்பவன் துணை செயலாளர் புகார்

 
r

ஆளுநரை செருப்பால் அடிக்கும் உரிமை தனக்கு உள்ளது என்று சொன்ன திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநருக்கு மிரட்டல் விடுத்து மேலும் தகாத வார்த்தைகளில் பேசியும் இருப்பதால் ராஜ்பவன் துணை செயலாளர் பிரசன்ன ராமசாமி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருக்கிறார் .

si

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்திய போது அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையிலிருந்த சில வார்த்தைகளை தவிர்த்து விட்டு,  புதிதாக தான் சில வார்த்தைகளை சேர்த்து படித்தார்.   குறிப்பாக தமிழ்நாடு ,அம்பேத்கர், காமராஜர், பெரியார், கருணாநிதி, அண்ணா , திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்தார்.

 இதனால் திமுகவினரும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பாகவே கூச்சல் போட்டு அமளியில் ஈடுபட்டனர்.  முதல்வர் ஸ்டாலினும் ஆளுநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார்.   இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.  அதன் பின்னர் திமுகவினர் கெட் அவுட் ரவி என்று ஆளுநரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

s

 திமுகவில் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி,   கொஞ்சம் கண் ஜாடை காட்டி இருந்தால் போதும் ஆளுநர் அங்கிருந்து போயிருக்க முடியாது.  கையில் எது கிடைத்திருக்கிறதோ அதை எடுத்து அடித்திருப்பான் என்று ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.  ஆளுநரை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். 

 அவரை தொடர்ந்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் பேசிய போது,   ஆளுநர் உரை நிகழ்த்தியபோது பேப்பரில் எழுதிக் கொடுத்தபடி படித்திருந்தால் அவர் காலில் பூ போட்டு அனுப்பி இருப்போம்.   ஆனால் தமிழகத்திற்கு, இந்தியாவிற்கு சட்டத்தை எழுதி கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் ஆளுநரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

l

அவர் மேலும்,   அரசியலமைப்புச் சட்டத்தை சொல்லித்தானே பதவியேற்றார் என்று கடுமையாக விமர்சித்தார் . அவர் மேலும் ஆளுநரை தகாத வார்த்தைகளில் மிகவும் அநாகரிகமான வார்த்தைகளில்  திட்டியுள்ளார் . மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார்.   இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.  இதை அடுத்து ஆளுநர் மாளிகை ராஜ்பவன் துணை  செயலாளர் பிரசன்ன ராமசாமி சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்திருக்கிறார்.   அந்த புகாரில் ஆளுநர் ரவி குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார்.  அவரின் பேச்சு வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதனால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இந்திய பீனல் கோடு 124,  1870 ன் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.