தமிழகத்தில் மே 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
Rain

தமிழகம், புதுச்சேரியில் மே 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி), சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

வருகிற 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

rain

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை,  இரணியல் ஆகிய இடங்களில் தலா  3 செமீ மழையும், தேனி பெரியார்  , குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் தலா 1 செமீ மழையும் பதிவானது. அதேசமயம் மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.