"தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன்

 
tn

தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

rain

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். அத்துடன்  தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

rain

இந்நிலையில் சென்னையில் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அதிகரிக்கும். தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து அக். 23-ம் தேதி விலகியது. வரும் 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு இயல்பை விட 45% அதிகமாக பெய்துள்ளது. வரும் நாட்களில் மழை பொழிவு படிப்படியாக அதிகரிக்கும். சிட்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். என்றார்.