சென்னையில் மழை - தாமரைப்பாக்கத்தில்10 சென்டிமீட்டர் மழை

 
r

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, விழுப்புரம் , திருவண்ணாமலை,  கடலூர்,  கள்ளக்குறிச்சி,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு , வேலூர். ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

s

 சென்னையில் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எம். ஆர். சி நகர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா ,ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் பத்து சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.  திருத்தணியில் ஏழு சென்டிமீட்டர் மழையும்,  பூண்டியில் மூன்று புள்ளி ஆறு சென்டிமீட்டர் மழையும் ,  ஊத்துக்கோட்டையில் 3.3 சென்டிமீட்டர் மழையும், சோழவரத்தில் 2.4 சென்டிமீட்டர் மழையும், திருவள்ளூரில் இரண்டு புள்ளி மூணு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 

 திருவாலங்காட்டில் 2.1 சென்டிமீட்டர் மழையும்,  பள்ளிப்பட்டு பகுதியில் 1.9 சென்டிமீட்டர் மழையும் பொன்னேரியில் 1.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.