சென்னை மழை பாதிப்பு - எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் ஆய்வு

 
e

முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இன்று மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார்.  முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்திருக்கும் நிலையில்  எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்கிறார்.

ம்

 வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து இருக்கிறது.  சென்னை முதல் குமரி வரைக்கும் பரவலான மழை பெய்து வருகிறது . சென்னையை பொறுத்தவரைக்கும் பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் மழை பெய்து வெளுத்து வாங்கி வருகிறது.  புறநகர் மாவட்டங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.  இதனால் குடியிருப்பு பகுதிகளில் அதிக மழை நீர் தேங்கி இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பார்க்க பாதிக்கப்பட்டு இருக்கிறது.

 சென்னை மாநகராட்சியை பொருத்தவரைக்கும் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் சில இடங்களில்  தண்ணீர் தேங்கி நிற்கிறது.  மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.  இந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில்  ஈடுபட்டுள்ளனர்.

 சென்னையில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.  இந்த நிலையில் இன்று சென்னையில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.  சென்னை ஆலந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.