மழை வெள்ள பாதிப்பு : சீர்காழியில் அண்ணாமலை ஆய்வு..

 
மழை வெள்ள பாதிப்பு :  சீர்காழியில் அண்ணாமலை ஆய்வு..


அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சென்று ஆய்வு  செய்தார்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்தது.  122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  ஒரே நாளில் 44 செ.மீ மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  அத்துடன் ஏராளமான குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்ததால்,  சீர்காழி பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே  முதல்வர் மு . க ஸ்டாலின் கடந்த  14ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிச் சென்றார்.

மழை வெள்ள பாதிப்பு :  சீர்காழியில் அண்ணாமலை ஆய்வு..

இந்த நிலையில்  இன்று , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.  அப்போது சுமார் 500 நபர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அவர் வழங்கினார்.  இதனைத்தொடர்ந்து  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  சீர்காழி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சீர்காழி  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான  நல்லூர், பன்னீர்க்கோட்டம், ஆலங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் பார்வையிட்ட அவர், ஆச்சாள்புரத்தில் பொதுமக்களிடமும்,   விவசாயிகளிடம் பாதிப்புகள், குறைகளை  கேட்டறிந்தார்.