பொங்கல் பண்டிகைக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்பவரா நீங்கள்? இதோ உங்கள் கவனத்திற்கு...!

 
ttn

பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே முன்பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது.  ஜனவரி 10ஆம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்பவர்கள் தீபாவளி,  பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது சொந்த ஊர்களுக்கு சென்று,  குடும்பத்துடன் பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம்.  அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14 போகிப் பண்டிகை துவங்கி 17ஆம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது . இதற்காக சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

train

ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இந்நிலையில் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ள நிலையில் காத்திருப்புப்பட்டியில் அதிகமாக இருக்கும் வழித்தடங்களை தேர்வு செய்து சிறப்பு ரயில்கள் இயக்க கூடுதல் பெட்டிகள் இணைக்க உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

train

அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ள நிலையில் காத்திருப்புப்பட்டியில் அதிகமாக இருக்கும் வழித்தடங்களை தேர்வு செய்து சிறப்பு ரயில்கள் இயக்கவும்,   கூடுதல் பெட்டிகள் இணைக்கவும்  உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.