வீறுநடை போட்டு ஒற்றுமைக்கான நடைபயணத்தை தொடங்கிய ராகுல்..

 
வீறுநடை போட்டு  ஒற்றுமைக்கான நடைபயணத்தை தொடங்கிய ராகுல்..

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.  நாடு முழுவதும் 12 மாநிலங்கள் வழியாக  150 நாட்கள் 3, 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார்.  இந்த யாத்திரையானது  திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, பெல்லாரி, ராய்ச்சூர், விக்ரபாத், ஜல்கயோன், இந்தூர், ஆழ்வார், டெல்லி, அம்பாலா, பதான்கோட், ஜம்மு சென்று ஸ்ரீ நகரில் முடிவடைகிறது. இதில் ராகுல் காந்தியுடன்  காங்கிரஸ் தலைவர்கள் 120 நடைபயணம் மேற்கொள்கின்றனர்.  

வீறுநடை போட்டு  ஒற்றுமைக்கான நடைபயணத்தை தொடங்கிய ராகுல்..

ராகுல் காந்தியின்  ஒற்றுமைக்கான யாத்திரை 4. 30 மணிக்கு தொடங்கியது.  இந்த தொடக்க விழாவில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,  சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ்  மற்றும்  கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட  ஏராளமான  காங்கிரஸ் தலைவர்கள்  பங்கேற்றுள்ளனர். காந்தி நினைவு மண்டபம் முன்பாக ராகுல் காந்தியிடம் தேசியக்கொடியை வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதன்பிறகு  தேசியக்கொடியுடன்  நடைபாதையாக வந்த, அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். தற்போது பொதுக்கூட்டமானது நடைபெற்று வருகிறது.  

வீறுநடை போட்டு  ஒற்றுமைக்கான நடைபயணத்தை தொடங்கிய ராகுல்..

தமிழகத்தில் மட்டும் 60 கி. மீ தொலைவிற்கு 4  நாட்கள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. இன்று சம்பிரதாயமாகவே இந்த நடைபயணம் தொடங்கியிருக்கிறது.  தற்போது நடைபெற்று வரும் நடைபயணம்  அவர் கன்னியாகுமரி அருகே அகஸ்தியபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரவு தங்குகிறார்.  இதற்காக 58 கண்டெய்னர் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 150 நாள் முழுவதும்  யாத்திரி செல்லும்  118 பேரும் தங்குவதற்கான வசதிகள், கழிவறைகள், குளியல் அறை  உள்ளிட்ட வசதிகள் அந்த கண்டெய்னர் லாரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

  மீண்டும் நாளை காலை 7 மணிக்கு அவர் நடை பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரையிலும் ,  மாலை 3 மணி முதல் 6  மணி வரை 6:00 மணி வரையிலும் ராகுல் காந்தி  நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.   காலை நேரத்தில் சுமார் 15 கிலோமீட்டரும்,   மாலை நேரத்தில் 8 கிலோமீட்டரும்  நடை பயணம் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.