ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை!

 
yn

ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

tn

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் வகையிலும் , பாஜகவுக்கு எதிராக மக்களை திரட்டும் விதமாகவும் காங்கிரஸ் கட்சி பாரத் ஜோடோ என்ற யாத்திரையை இன்று முதல் தொடங்கவுள்ளது.  இன்று கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி 150 நாட்கள் 3570 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள இந்த யாத்திரையின் தொடக்க நிகழ்வாக இரவு  அகத்தீஸ்வரத்துக்கு செல்லும் ராகுல் காந்தி விவேகானந்தர் கல்லூரியில் தங்க உள்ளார்.

ttn
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில்  தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி முதல் முறையாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  பின்னர்  ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தியானத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்ட அவர் விமான மூலம் திருவனந்தபுரம்  செல்கிறார்.  திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு கார் மூலம் வரும் ராகுல் காந்தி பிற்பகல் 3 மணியளவில் திருவள்ளுவர் சிலை ,விவேகானந்தர் சிலை, காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம்  ஆகிய இடங்களில் மரியாதை செலுத்துகிறார்.