காலில் விழும் கலாச்சாரம் தவறானது! காலில் விழ முயன்றவருக்கு ராகுல் அறிவுரை

 
rahul gandhi

காலில் விழும் கலாச்சாரம் தவறானது என்று தனது காலில் விழுந்த விழ முயன்ற பஞ்சாயத்து தலைவரிடம் ராகுல் காந்தி அறிவுறுத்தினார்.

Rahul Gandhi, other Congress leaders embark on 'Bharat Jodo Yatra' from  Kanyakumari

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சி அல்லாத 12 ஊராட்சி மன்ற தலைவர்களை ராகுல் காந்தி புலியூர்குறிச்சியில் சந்தித்து பேசினார் பஞ்சாயத்து தலைவர்கள் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த  ராகுல் காந்தி உங்களுக்கு மேல் அதிகாரம் உள்ளது. அந்த  அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்  கேள்வி கேட்க தயங்குபவர்கள் எப்படி அதிகாரத்தை விரும்புவீர்கள், கேள்வி கேட்க தயங்குபவர்களால் எப்படி அதிகாரத்தை கைப்பற்ற முடியும்  என்று கூறினார். அவரது காலில் விழ முயன்ற தென்காசி மாவட்டம்  டி.ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்தினை அவர் காலில் விழ அனுமதிக்கவில்லை. காலில் விழுவது தவறான கலாச்சாரம் என்று அறிவுறுத்தினார்.

இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கி உள்ள ராகுல்காந்தி, இன்று தனது மூன்றாவது நாள் பயணத்தை கன்னியாகுமரியில் மேற்கொண்டார்.