முதல்முறையாக ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு செல்கிறார் ராகுல் காந்தி

 
rahul

நாளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு செல்கிறார் ராகுல் காந்தி.

அகில இந்திய காங்கிரஸின் பாரத ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நாளை  தொடங்குகிறது. 150 நாட்கள் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை ஆக செல்கிறார் . இதற்காக இன்று இரவு 8:15 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் அவருக்கு  விமான நிலையத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்பு அளிக்கிறார். ராகுல் காந்தியுடன் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்,  சத்தீஸ்கர் முதல்வர் பாகல் மற்றும் மூத்த தலைவர்கள் வருகை புரிகிறார்கள். 

rahul gandhi

இதையடுத்து நாளை காலை 6 மணியளவில் சென்னையிலிருந்து சாலை வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ பெரும்புத்தூரில் உள்ள பாரத ரத்னா ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு ராகுல் காந்தி சென்று அஞ்சலி செலுத்துகிறார். இதைத்தொடர்ந்து நினைவிடத்தில் மரக்கன்று நடுதல், ராஜீவ் காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் அவருடன் உயர்த்தியாக்கம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்தல் ,  ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நினைவிட நுழைவாயில் அருகில் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார்.

ttn

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு 12 ஆண்டுகளுக்கு பின்னர் 2003 ஆம் ஆண்டு அவரது நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் கட்டி முடிக்கப்பட்டது.  இந்நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் வந்தபோதிலும் ராகுல் காந்தி வந்ததில்லை.  15 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ராகுலும் பிரியங்காவும் அஞ்சலி செலுத்த வந்தனர். காரை நிறுத்திவிட்டு இறங்கும் போது  பிரியங்கா துக்கம் தாளாமல் தரையில் அமர்ந்து  கதறி அழுதுவிட்டார்.  பிரியங்காவை கட்டியணைத்து ராகுல் ஆறுதல் படுத்த முயன்றும் முடியவில்லை.அதனால் நினைவிடத்திற்குள்  செல்லாமலே அவர்கள்  அங்கிருந்து சென்று விட்டனர். தற்போது ராகுல் காந்தி முதல் முறையாக ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வருகிறார்.