புதுக்கோட்டை கிராம சமையல் குழுவை சந்தித்த ராகுல் காந்தி

 
rahul gandhi

இந்திய ஒற்றுமை பயணத்தின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதுக்கோட்டையை சேர்ந்த பிரபல வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த சமையல் கலைஞர்களை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற தலைப்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் 3-ம் நாள் நடைபயணத்தை ராகுல் காந்தி நாகர்கோவிலில் இருந்து தொடங்கினார். வழிநெடுகிலும், காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வில்லுக்குறி பகுதியில் ராகுல் காந்தியை சந்தித்த விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். முன்னதாக ராகுல் காந்தி வில்லுக்குறி பகுதியை அடைந்தபோது, அங்கிருந்த சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து டீ குடித்தார்.   சுங்கான்கடை, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, தக்கலை, அழகியமண்டபம் வழியாக செல்லும் ராகுல், முலகுமூட்டில் இன்று தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

Rahul

இந்நிலையில், ராகுல் காந்தியுடன் புதுக்கோட்டையை சேர்ந்த பிரபல வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த சமையல் கலைஞர்கள் சந்தித்தனர். ராகுல் காந்தியுடன் அவர்கள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த மூத்த சமையல் கலைஞர் ஒருவர் அணிவித்த பட்டு துண்டை ராகுல் காந்தி தனது தலையில் கட்டிக்கொண்டார்.