40 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை- ராதாகிருஷ்ணன்

 
radha krishnan health

இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமின் மூலம் 12 லட்சத்து 25 ஆயிரத்து 325 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Political leaders must ensure mask discipline at rallies: TN Health Secy |  The News Minute

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “கடந்த சில வாரங்களாக தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 ஆயிரமாக குறைந்த நிலையில், தடுப்பூசியை மீண்டும் மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன்படி இன்று நடைபெற்ற 28வது மெகா தடுப்பூசி மூகாமில் மொத்தமாக 12.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் நடைபெற்ற 27வது தடுப்பூசி மூகாமில் 4 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில், இன்று இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   கடந்தாண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற 11வது தடுப்பூசி மூகாமின் போது தான் கடைசியாக 12 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு இருந்தனர். அதன் பிறகு 4 மாதங்களுக்கு பின்னர் இன்று தான் மீண்டும் 12.25 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் 1கோடியே 48 லட்சம் பேர் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். மேலும் 40 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாமல் உள்ளனர் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமின் மூலம் விழுப்புரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களை அதிகப்படியான தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் குறைவான தடுப்பூசியே இன்று செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 100 சதவீதம் முதல் தவணைத் தடுப்பூசியும் முழுவதுமாக செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தமிழ்நாட்டில் முறையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்வதன் மூலமும் ஒமிக்ரான் தொற்றை முழுவதுமாக தடுக்க முடியும். வரும் 8 ஆம் தேதி தடுப்பூசி முகாம் மீண்டும் நடைபெறும். 8ஆம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சென்னை ஐஐடியில் இதுவரை 196 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.