பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸார் பலத்த பாதுகாப்பு..

 
பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸார் பலத்த பாதுகாப்பு..


  கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 தமிழகத்தில் அக்.2-ம் தேதி  ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டது.  அதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு  சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.  இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நவ.6-ம் தேதியன்று நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டிருந்தது.  கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், அருமனை, நாகர்கோயில் உள்ளிட்ட 6 இடங்களை் தவிர 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது.  ஆனால், நவம்பர் 6-ம் தேதி  ஊர்வலத்தை நடத்த இயலாது என்றும்,   தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் பேரணி  ஒத்திவைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்திருந்தது.

rss

இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி, கடலூர்  மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஆர்.எச்.எஸ்.பேரணி நடைபெற்றது.   கள்ளக்குறிச்சி -  சேலம் சாலையில்  கவரை தெரு, காந்தி சாலை, 4 முனை சந்திப்பு, சேலம் பிரதான சாலை, மார்க்கெட் சாலை வழியாக மந்தைவெளி பகுதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. அந்தனைத்தொடர்ந்து  அங்கு பொதுக்கூட்டத்திற்கும்  ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த பேரணியில் 300-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றனர். இதனால் இப்பகுதியில்  1300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.   

ஆர்.எஸ்.எஸ்.

இதேபோல், பெரம்பலூரில் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, வானொலி திடலில் நிறைவடைந்து, அங்கு  பொதுக்கூட்டமும்  நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில்,  3 மாவட்ட எஸ்.பிக்கள் தலைமையில் 900 போலீஸார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  கடலூர் மாவட்டம்  திருப்பாதிரிபுலியூர் மாட வீதியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் 500-க்கும் மேற்பட்டொர்  பங்கேற்றனர். 1700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரணி நடைபெறும் பகுதி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என முழுவதுமாக  காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இங்கும் பேரணியின் முடிவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.