திமுகவை குடும்ப கட்சி என சொன்னவர்கள் இன்று குடுமியை பிடித்துக்கொண்டு கோர்ட்டில் நிற்கின்றனர்- ஆர்.எஸ்.பாரதி

 
rs bharathi

திமுகவை குடும்ப கட்சி என சொன்னவர்கள் இன்று குடுமியை பிடித்துக்கொண்டு கோர்ட்டில் நிற்கின்றனர்- ஆர்.எஸ்.பாரதிதிமுக இலக்கிய அணி சார்பில் தலைவர் தளபதியின் தீரமிகு மடல்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தி, நகரில் உள்ள சர்.பி.டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. 

Rajya Sabha MP RS Bharathi arrested in Chennai, gets bail | India News,The  Indian Express

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் ,ராஜ கண்ணப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கு பெற்றுள்ளனர் .மேலும் கழக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர். 

நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “திமுகவை அழிக்க நினைத்தவர்கள் நிலை என்ன என்பதை நான் சொல்ல தேவையில்லை. குடும்ப கட்சி என்ற சொன்னவர்கள் இன்று குடுமியை பிடித்துக்கொண்டு கோர்ட்டில் நிற்கின்றார்கள். இனிமேல் பொதுக்கூட்டம் நடத்தினால் கழக வரலாறை பேச வேண்டும். ஆ.ராசா பேசியதை மிகப்பெரிய குற்றம் என ஒரு கூட்டம் எதிர்க்கிறது இன்று உள்ள தமிழனிடம் சொரணை  போய்விட்டது. சமதர்மம் நாட்டிலேயே நிலவ பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம் ராசாவின் இந்த பேச்சுக்கு எந்த பிராமனணும் போராடவில்லை. யாருக்காக இத்தனை ஆண்டுகாலம் போராடினோமோ அவன் தான் எதிர்க்கிறான். இன்று இளைய சமுதாயத்திடம் பெரியாரிசம்  தலை தூக்குகிறது இது நாட்டுக்கு ஒரு ஆரோக்கியமான போக்கு. இன்று பள்ளி மாணவர்களிடையே ஆர்.எஸ்எஸ் யின் பயிற்சி தொடங்க ஆரம்பித்து விட்டது. இந்த போக்கு நீடித்தால் தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றி விடுவார்கள்” எனக் கூறினார்.