குடியரசு நாள் விழாவில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

 
tn

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா இன்று நடைபெற்றது.

tn

விழாவிற்கு முதலில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். அவரை தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ரவி விழாவிற்கு வருகை தந்தார்.  ஆளுநருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொடுத்துக் கொடுத்து வரவேற்றார்.

tn

இந்நிலையில் 74 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.