சொத்துவரி கட்டவேண்டும் என்றால் சொத்தை விற்க வேண்டும் போல... ஆர்பி உதயகுமார்

 
rb udhyakumar

காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டார். 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வேறு ஒருவருக்குதான் ஓபிஎஸ் கேட்டார்” - ஆர்.பி  உதயகுமார் | ex admk minister rb udhayakumar interview | Puthiyathalaimurai  - Tamil News | Latest Tamil ...


மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன நிலையில் காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் காந்தியடிகள் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் மலர்கள் தூவி மரியாதை செய்து ராட்டையில் நூல் நூற்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரைக்கு என தனித்துவமான பாரம்பரியம், பண்பாடுகள் உள்ளது, மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி செய்தார், அரை ஆடை புரட்சி நடைபெற்று 100 ஆண்டுகள் கடந்துள்ளது. அரை ஆடை புரட்சி என்பது உலக புரட்சியாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்து மாத்திரைகள்  தட்டுப்பாடு உள்ளது. மருந்து தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சொத்து வரி கட்ட வேண்டும் என்றால் சொத்தை விற்கும் நிலை உள்ளது" என கூறினார்