இனிவரும் தேர்தல் அனைத்திலும் அதிமுகவே வெற்றிபெறும்- உதயகுமார்

 
rb udhayakumar

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu: Minister RB Udhayakumar attempts to boost Palaniswami's  popularity raises embarrassing questions - India News

மதுரையில் ஏழை மற்றும் சாலையோர மக்களூக்கு நெல்லை பாலு என்பவர் நடத்தி வரும் அட்சய பாத்திரம் அமைப்பின் முலம் தொடர்ந்து 501 நாள் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியில்  ன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் 2.25 இலட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பேரடியாக உள்ளது, மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர்  அறிவித்தது விளம்பர அறிவிப்பு, கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல என்றார்.

அதிமுகவில் அதிமுகவிற்கு எதிராக உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் வரும் இனி வரும் எந்த தேர்தல் என்றாலும் அதில் அதிமுக வெற்றி பெறும், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும்” என கூறினார்