தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டவே ஓபிஎஸ் மீண்டும் மீண்டும் நீதிமன்றம் செல்கிறார்- ஆர்பி உதயகுமார்

 
rb udhyakumar

ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும், திருப்திப்படுத்தவே ஒ.பி.எஸ் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவி.. ஓபிஎஸ் இடத்தில் ஆர்.பி. உதயகுமார்..  எடப்பாடி பழனிச்சாமியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

மதுரை யூனியன் கிளப்பில் ரோட்டரி சங்கம் சார்பில் 2 நாட்கள் நடைபெறும் டென்னிஸ் போட்டியை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் டென்னிஸ் விளையாண்டு தொடங்கி வைத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், "அதிமுக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்தது, நீதிமன்ற தீர்ப்பால் ஆன் லைன் ரம்மி தொடர்கிறது, ஆன்லைன் ரம்மியால் 23 பேர் தமிழகத்தில் உயிரிழந்து உள்ளனர், தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், 

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தமிழக வாழ்வாதார உரிமைகள் குறித்து கோரிக்கை வைத்து இருக்கலாம். என் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்தது அரசியல் காழ்புணர்ச்சி, எந்த ஒரு சோதனைகளையும் எதிர்க் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பிரதமர் மோடியை யார் யார் வரவேற்க, வழியனுப்ப வேண்டும் என்பது பிரதமர் அலுவலகம் மட்டுமே முடிவு செய்வார்கள். தன்னுடைய ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும், திருப்திப்படுத்தும் விதமாகவும் ஒ.பி.எஸ் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்கிறார். எடப்பாடி கே.பழனிச்சாமி பக்கம் 99 சதவீத அதிமுகவினர் உள்ளனர். ஒ.பி.எஸ் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அதிமுகவில் சேரலாம் என செல்லூர் ராஜு கூறி இருப்பது அவரின் உரிமை" எனக் கூறினார்