முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று!!

 
rn

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூத்த அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமானவர் ஆர்.எம்.வீரப்பன். இவர் எம்ஜிஆர் கழகத் தலைவருமாவார். அதிமுகவில் பொறுப்பில் இருந்த போதிலும் திமுகவினருடன் நட்பு பாராட்டி வந்தார். 95 வயதான இவர் அரசியலில் இருந்து ஒதுங்கி சென்னை, தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். 

tn

இந்நிலையில் எம்ஜிஆர் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் தொற்றால்  பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஆர்.எம்.வீரப்பனுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

tn
 
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில்  2,340 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 15 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 60 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.