தமிழகத்தில் காலாண்டு தேர்வு இன்று முதல் தொடக்கம்!!

 
school

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து விட்டது . ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வில் நடத்த நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  அத்துடன் காலாண்டு தேர்வு பொருத்தவரை பள்ளி அளவில்  வினாத்தாள் தயாரித்து தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது வினாத்தாள் வெளியாகும் நிலையில் புதிய நடைமுறையாக இந்த நடைமுறையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

school

இந்நிலையில் பள்ளிகளில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் பருவத்தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு தொடங்குகிறது.  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு தொகுத்தறியும் மதிப்பீட்டு தேர்வு என்ற முறையில் பருவ தேர்வு நடத்தப்படுகிறது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடவாரியாக தனித்தனியே காலாண்டு அட்டவணை தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

dpi building

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று முதல் நடத்தப்படுகிறது .  30-ம் தேதியுடன் தேர்வுகள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டு தேர்வு எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தி முடிக்க வேண்டும்  என்றும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு அக்டோபர் ஆறாம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது .