மாணவர்கள் குஷி! காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு

 
Holiday

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் பொது காலாண்டு தேர்வு நடத்தும் திட்டம் இந்த ஆண்டு இல்லை என முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும், கேள்வித்தாள்களும் மாநில முழுமைக்கும் பொதுவானதாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக கேள்வித்தாள்களை தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக அமல்களில் இருந்த பொது காலாண்டு தேர்வு, பொது கேள்வித்தாள் திட்டம் இந்த ஆண்டு திடீர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.