சிலைக்கடத்தலில் பழனிச்சாமிக்கு தொடர்பு- புகழேந்தி அதிரடி

 
Pugalendhi

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “பொன்மாணிக்கவேல் அவர்கள் சிலை தடுப்பு பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் பிறகு நிறைய கடத்தப்பட்ட சிலைகளை கண்டறிந்தார். சிலைகடத்தலில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாகக் நீதிமன்றத்தில் கூறினார். அதனால் அவரை மாற்ற முயற்சித்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அந்த இரண்டு அமைச்சர் யார்? என பொதுமக்களிடம்  கூற வேண்டும். அதில் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியும் இருப்பாரோ என சந்தேகம் உள்ளது.  

சிலைக்கடத்தலில் பழனிச்சாமிக்கு என்ன தொடர்பு என்பது பொன் மாணிக்கவேல் நாட்டு மக்களுக்கு  கூறவேண்டும். அவர் உண்மையைக் கூறுவார் என நம்புகிறேன். தமிழக அரசு இதை மறு விசாரணை செய்ய வேண்டும். அம்மாவின் பெயரைச் சொல்லி கொள்ளையடித்த, நாட்டை சுரண்டிய எடப்பாடி கும்பல் கடவுள் தெய்வங்களையும் திருடியுள்ளது. 

1000 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்து விட்டதாக கூறிய எடப்பாடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டால் அதைப்பற்றி கேட்பார்கள் என்று பயந்துதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை” எனக் கூறினார்.