நீதிமன்றங்களில் தாய்மொழியில் வாதாடினால் வழக்குகள் எளிதில் முடிவுக்கு வரும் - தமிழிசை

 
tamilisai

நீதிமன்றங்களில் அந்தந்த தாய்மொழிகளில் வாதாடும்போது வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாகும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 105 அறைகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை அளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

இந்த விழாவில் தமிழிசை சௌந்தராஜன் பேசியதாவது: புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு அறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டித்தரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.  நமது பிரதமர் மோடி வழங்கப்படும் நீதி நாட்டின் வளர்ச்சிக்கு, நல்ல சமுதாயம் உருவாக உதவும் என கூறுவார். நல்ல சமுதாயம் உருவாக நீதித்துறையின் பங்கு அவசியம். நீதிமன்றங்களில் அந்தந்த தாய்மொழிகளில் வாதாடும்போது வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாகும். தமிழில் வாதாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என பலமுறை வலியுறுத்தியுள்ளோம். வரும் காலத்தில் நீதிமன்றத்தில் தாய்மொழியில் வாதாடும் வாய்ப்புகள் உருவாகும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு பேசினார்.