பாஜக நிர்வாகி கைதை கண்டித்து போராட்டம் - 11பேர் கைது

 
tn

பாஜக நிர்வாகி உத்தம ராமசாமி கைதை கண்டித்து போராட்டம் நடத்திய  11பேரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

tn

திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கடந்த 5ம் தேதி திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்து மதத்தை சேர்ந்தவர்களை  அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது குறித்து பாஜக தரப்பில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அத்துடன் அண்மையில் பீளமேடு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்  ஆ. ராசாவை மிரட்டும் வகையில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசியிருந்தார். உத்தம ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். கோவை பாஜக மாநில தலைவர் கைதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

arrest

இந்நிலையில் கோவையில் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கைதை கண்டித்து போராட்டத்தில்ஈடுபட்ட பாஜகவினர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீளமேடு காவல்நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 32பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவான நிலையில் 11 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.