வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றினால் சொத்துக்கள் ஏலம் விடப்படும்

 
income tax

வரிபாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை தலைமை முதன்மை ஆணையா் தெரிவித்துள்ளார். 

Income Tax Returns: How to file ITR online? Here's a step-by-step guide -  Hindustan Times

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதன்மை தலைமை வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரை மண்டலத்தில் வருமானவரித்துறை வசூல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மதுரை மண்டலத்தில்  2ஆயிரத்தி 100கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது, அடுத்துவரும் காலாண்டில் கூடுதலாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அகில இந்திய அளவில் தமிழகம் புதுச்சேரி 1லட்சத்தி 8ஆயிரம் கோடி இலக்கில் 70சதவிதம் வரி வசூலித்துள்ளோம். அகில இந்திய அளவில் 17சதவித இலக்கை தாண்டி கூடுதலாக 11சதவிதம் வசூலித்து 28 சதவீதம் வசூலித்துள்ளோம், வரும் நிதியாண்டில் 1.25ஆயிரம் கோடி வசூலிக்கவுள்ளோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 67லட்சம் பேர் இதில் மதுரை மண்டலத்தில் 9 லட்சம் பேர் உள்ளனர். கடைசி வருடத்தில் ஒரு லட்சம் பேர் கூடுதலாக வரி செலுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10% பேர் புதிதாக வருமானவரி செலுத்தி வருகின்றனர். வருமான வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். மதுரை மண்டலத்தில் TDS ரிட்டன் குறித்து ஆலோசனை வழங்கினோம், TDS பைலில் உள்ள குழப்பம் என்ன என்பது குறித்து வரிசெலுத்துவோர்கள் தெரிவித்தனர். வருமானவரித்துறையின் வரி செலுத்துவோருக்கான சேவையை சிறப்பாக செய்துவருகிறோம்.

தற்போது வருமானவரியில் ரீ பண்ட் பிரச்சனை இல்லை, மதுரை மண்டலத்தில் இந்திய அளவில் வரிவசூல் மிகக்குறைவு.வரி செலுத்துவோரின் புகார்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. வரிபாக்கி வைத்துள்ளவர்கள மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அவர்களது சொத்துகளை ஏலம் விட உள்ளோம், அதன் முலம் வழியாக வரியை வசூலிக்கவுள்ளோம், தற்போது வரிபாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துகளைஆய்வுசெய்து வருகிறோம். விவாஸ்வே விஸ்வாகி என்ற முகாம் மூலமாக மதுரை மண்டலத்தில் 600பேர் பயனடைந்துள்ளனர். FORM -5ஐ வழங்கி வரிபாக்கி குறித்த பிரச்சனைகளை முடிவுகளை வழங்கிவருகிறோம். இந்திய அளவில் வரி வசூலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது” எனக் கூறினார்.