"அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு" - தலைமைச் செயலாளர் உத்தரவு

 
govt

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

iraianbu

அரசு பணியாளர்களுக்கு அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று அல்லதுஅரசாணையில், அரசுப் அதற்கு சில நாட்கள் முன்னதாக பதவி உயர்வு அளிப்பதற்கு ஏதுவாக பணியில் உள்ள மூத்தோர் விடுப்பில் செல்வதன் மூலம் ஏற்படும் செயற்கையான காலிப்பணியிடங்களில் பதவி உயர்வு அளிப்பதை கட்டாயமாக தவிர்த்திடுமாறு அனைத்து நியமன அலுவலர்களுக்கும் அறிவுறுத்தங்கள் வழங்கப்பட்டன. எனினும், அரசுப் பணியாளர்களின் இறப்பு, பணி ஓய்வு, நீண்டகால விடுப்பு ஆகியவற்றால் ஏற்படும் காலிப்பணியிடங்களை நடைமுறையில் விதிகளை பின்பற்றி நிரப்புவதற்கு தடையேதும் இல்லை எனவும் அவ்வாணையில் தெரிவிக்கப்பட்டது. - 2 மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசுக் கடிதத்தில், அரசுப் பணியாளர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வு பெற ஏதுவாக தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலினை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்த்திடுமாறு அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

tn govt

எனினும், சில நேர்வுகளில் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் தாமதமாக வெளியிடப்பட்டு, முழு தகுதி உடையோருக்கு உரிய காலத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்படுகிறது என்றும், சில அலுவலர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றோ அல்லது சில நாட்களுக்கு முன்னரோ பதவி உயர்வு வழங்க செயற்கையாக காலிப்பணியிடங்கள் ஏற்படுத்துதல் மற்றும் பதவி நிலை உயர்த்துதல்போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், மேலும், பதவி உயர்விற்கான அலுவலர்தம் முறை வரும் முன்னரே பதவி உயர்வு வழங்குவதாகவும் கூறப்படுகிறது. என்னவே இனிவரும் காலங்களில்  அரசு அலுவலர்களின் பதவி உயர்வுக்கான அவர்தம் முறை வரும் முன்னர் மற்றும் ஓய்வு பெறவுள்ள நிலையில் செயற்கையாக காலிப்பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்குதலை தவிர்த்தல்  வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.