தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அனைத்து யுனிட்டுகளிலும் மின் உற்பத்தி

 
Tuticorin thermal station

விசாகபட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி  அனல்மின் நிலையத்திற்கு 30-ஆயிரம் டன் நிலக்கரி வந்துள்ளதை தொடர்ந்து அனல்மின் நிலையத்தில் உள்ள 5 யுனிட்டுகளிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் தலா  210 மெகாவாட் வீதம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது யூனிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் நிலக்கரி கொண்டுவரப்பட்டு கடந்த சில தினங்களாக  யூனிட்டுகள் பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையத்தில் உள்ள 2 3 4 5 ஆகிய நான்கு யூனிட்டுகள் ஒரே நேரத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. 1வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

coal

இந்த நிலையில்  விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் நிலக்கரி வந்ததை தொடர்ந்து மீண்டும்2 3 4 5 ஆகிய நான்கு யூனிட்களில் மின் உற்பத்தி துவங்கியது. தற்போது அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து யூனிட்டுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதன் காரணமாக தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் தற்போது 5 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.