#BREAKING தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!!

 
“I consider myself as first commander of his force” – Kalaipuli S Thanu emotional statement on Bharathiraja

திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு ,  எஸ்.ஆர். பிரபு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

“I consider myself as first commander of his force” – Kalaipuli S Thanu emotional statement on Bharathiraja

சென்னையில் இருவருக்கும் சொந்தமான அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர். பிரபு கைதி, என்ஜிகே உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.  சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது திரைப்பட தயாரிப்பாளர்கள் தாணு  மற்றும் எஸ்.ஆர். பிரபு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது கோலிவுட்டில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

tn

பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு சமீபத்தில் கபாலி,அசுரன், கர்ணன் உள்ளிட்ட  படங்களை தயாரித்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.