பிரியா அதிர்ச்சி மரணம் - குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

 
ப்

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் அடைந்திருக்கிறார்.  பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.  மேலும் பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

ப்

 உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா(17)  சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 மருத்துவர்களின் அலட்சிய போக்கு,  தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம் என்று பெற்றோர்கள் புகார் கூறியதும்,  அமைச்சர் மா.சுப்பிரமணியமும் இதை ஒப்புக்கொண்டார்.   மேலும் மாணவிக்கு காயம் சரியான உடன் பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும்.  அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று தெரிவித்திருந்தார்.  

ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்து விட்டதால்,  போலீசார் விசாரணை நடந்து வருகிறது.  சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.  பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மருத்துவமனை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

க்

பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.  மேலும் பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.