ஜெர்சி, கால்பந்துடன் பிரியாவின் உடல் நல்லடக்கம்

 
priya

சென்னை குயின் மேரி கல்லூரியில் படித்து வந்தவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா. கடந்த மாதம் 20-ந்தேதி பயிற்சியில் ஈடுபட்டபோது வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது. பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வலி குறையாத நிலையில் கடந்த 7-ந்தேதி ஆபரேசன் நடந்துள்ளது. 

பிரியா

ஆபரேசன் செய்த பிறகும் வலி குறைவதற்கு பதில் அதிகரித்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் பிரியா அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கால் அகற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு பிரியாவின் உறவினர்களிடம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை தரப்பில் பெற்றோருக்கு தெரிவித்த நிலையில் பிரியாவின் குடும்பத்தினர் அனைவரும் ஐசியூ நுழைவாயிலில் குவிந்தனர். காலில் ஏற்பட்ட சவ்வு பிரச்னையால் அனுமதிக்கப்பட்டவர் தவறான சிகிச்சையால் வலது காலை இழந்ததோடு, இன்று காலை உயிரையும் இழந்தார். தமிழ்நாடு அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணமும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமண்இயன் தெரிவித்தார்.


சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பிரியா, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்ற நிலையில், அவரது உடல் ஜெர்சி, கால் பந்து மற்றும் அவர் பயன்படுத்திய வளையல் உள்ளிட்டவற்றுடன் கீழ்ப்பாக்கம் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.