தவறான சிகிச்சையால் பிரியா உயிரிழப்பு - அமைச்சர் பரபரப்பு - போலீசார் குவிப்பு

 
p

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என்று பிரியாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.

பிரியார் உயிரிழப்பால் மருத்துவமனையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

க்ஹ்

 சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தான் பெரிய மருத்துவமனை.  இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பிரியாவை ஏன் கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்?  எதற்காக மாற்றி  அனுப்பினார்கள்?  என்பது குறித்து விசாரணை குழு விசாரணை நடத்தி  வருகிறது. மருத்துவர்களின் கவனக்குறைவு என்பது தெரிய வந்ததுமே சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இடமாற்றம் செய்திருக்கிறோம். பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம். 

மூட்டு அறுவை சிகிச்சைக்காக போடப்பட்ட கட்டு காரணமாக ரத்த ஓட்டம் தடைபட்டிருக்கிறது.  கால்களை அகற்ற வேண்டிய நிலையிலேயே அந்த நடவடிக்கை எடுத்தோம்.   ஆனால் அதையும் மீறி உயிரிழப்பு நேர்ந்து விட்டது.  உயிரிழப்பு என்பது பெரிய பாதிப்பு. அந்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.  அது  மட்டுமல்லாமல் அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.  இதுகுறித்து காவல்துறைக்கும்  புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.  காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை வியாசர்பாடி பகுதியினைச் சேர்ந்தவர் பிரியா.  சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கால்பந்து விளையாட்டிலும் பயிற்சி பெற்று வந்தார்.   தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்து வந்த பிரியா, அண்மையில் பயிற்சியின்போது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது .

இதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றிருந்தர் பிரியா.  அப்போது காலில் தசை பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.   இதை அடுத்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  தசைப் பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்தார்.  ஆனாலும் பிரியாவுக்கு காலில் வலி குறையாமல் இருந்தது .

ம

இதனால் சிகிச்சைக்காக அவர் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் குழு செய்த பரிசோதனையில் காலில் இருந்த தசைகள் அனைத்தும் அழுகக் கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.   இதை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற வேண்டும்.  இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.  பெற்ற மகளை காப்பாற்ற வேறு வழியில்லாததால் அறுவை சிகிச்சை செய்ய பெற்றோர் ஒப்புக்கொண்டனர் .  

 மருத்துவர்களின் அலட்சிய போக்கு,  தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம் என்று பெற்றோர்கள் புகார் கூறினர். அமைச்சர் மா.சுப்பிரமணியமும் இதை ஒப்புக்கொண்டார்.   மேலும் மாணவிக்கு காயம் சரியான உடன் பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும்.  அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று தெரிவித்திருந்தார்.  ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்து விட்டார்.  இதை அடுத்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது.  சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.  ஆனாலும் பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மருத்துவமனை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.