பிரியா மரணம்- அறிக்கையில் மருத்துவர்கள் தவறு உறுதியானது

 
priya football

சென்னை காவல்துறைக்கு பிரியா மரணம் தொடர்பான மருத்துவக் கல்வி இயக்குனரக அறிக்கையில் மருத்துவர்கள் தவறு உறுதியானது.

Doctors Mistake : Teen Football Player Priya Died At Chennai !! - Chennai  Memes

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மாணவி பிரியா, அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார். வீராங்கனை உயிரிழந்ததை தொடர்ந்து இருமருத்துவர்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா அறுவை சிகிச்சையில் , மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தவறு செய்துள்ளார்கள் என மருத்துவக் கல்வி இயக்குனராக அறிக்கையில் உறுதியாகி உள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்வி இயக்குனராக அறிக்கையை அடிப்படையாக வைத்து இயற்கைக்கு மாறான மரணம் 174 என்ற சட்ட பிரிவின் கீழ் போடப்பட்ட வழக்கு ,304 ஏ அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவ கல்வி இயக்குனராக அறிக்கையை சட்ட நிபுணர்களுக்கு அனுப்பி வைத்து மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்படலாம் என தெரிவித்துள்ளது. வழக்கப் பிரிவு மாற்றப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது