எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை மரணம் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

 
stalin

சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை மறைவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

சென்னை எழும்பூரில் எத்திராஜ் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது.  இக்கல்லூரியின் முதல்வர் கோதை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.   உடலநலக்குறைவால்  ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. கடந்த 25 ஆண்டுகளாக எத்திராஜ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கல்லூரியின் முதல்வராக பொறுப்பு வகித்து வந்தார்.  வேதியியல் துறை பேராசிரியர் கோதை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கல்லூரி முதல்வர் கோதையின் மறைவை ஒட்டி கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

rajinikanth and cm stalin

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் திருமதி. கோதை அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.25 ஆண்டுகள் எத்திராஜ் கல்லூரியில் பணியாற்றி, 2019-ஆம் ஆண்டுமுதல் கல்லூரி முதல்வராகவும் பொறுப்பு வகித்து மாணவிகளின் நன்மதிப்பைப் பெற்ற திருமதி. கோதை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.