பிரதமர் மோடி வருகை - உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை நகரம்!!

 
modi stalin

செஸ் ஒலிம்பியாட்  தொடக்கப்போட்டி நிகழ்ச்சியை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

chess

இந்தியாவில் முதல்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  நாளை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.  நாளை முதல் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள ஒலிம்பியாட்  செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கிட்டத்தட்ட 2,000 க்கும் மேற்பட்ட வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் . இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை மாலை 4:45 மணியளவில் சென்னை வருகிறார்.

PM MODI

 பிரதமர் மோடியின் வருகை ஒட்டி சென்னையில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.  சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவா தலைமையில் 22,000 போலீசார் ஐந்து அடுக்கு பாதுகாப்பில் நாளை ஈடுபட உள்ளனர்.  ட்ரோன்கள் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் வரும் சாலை முழுவதுமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில் அரங்கிற்கு வரும் அனைத்து வாகனங்களுமே முழுமையான சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி அட்டை வைத்திருக்க கூடிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை 11 மணி அளவில்,  மாமல்லபுரத்தில் இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.