திண்டுக்கல் வந்தார் பிரதமர் மோடி - பொதுமக்களை பார்த்து கையசைத்தார்

 
pm modi

காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக திண்டுக்கல் வந்த பிரதமர் மோடி காரில் செல்லும் போது வெளியே வந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தார். 

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக  பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து தனி விமானம் மூலம்  மதுரை விமான நிலையத்துக்கு இன்று பிற்பகலில் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.இதையடுத்து, பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக மழை காரணமாக அவர் சாலை மார்க்கமாக செல்வதாக இருந்தது. இந்நிலையில், தற்போது மழை இல்லாத காரணத்தினால் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திண்டுக்கல் சென்றார். அங்கு நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

pm modi

இந்த நிலையில், திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக சில புத்தகங்களை வழங்கினார்.  

pm modi

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அங்கிருந்து காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் வழியில் காரை விட்டு வெளியே வந்து பொதுமக்களை பார்த்து கையசைத்தார். இதேபோல் பிரதமர் மோடியை கண்ட பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேறு அளித்தனர்.