திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..

 
modi

திருவள்ளுவர் தினத்தையொட்டி  பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட  அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..

இதேபோல் பாமக தலைவர் ராமதாஸ், “வாழ்க்கை நெறிகளை வகுத்துத் தந்ததுடன், தமது வள்ளுவத்தின் மூலம் உலகம் முழுவதும் தமிழ்க்கொடியை உயர்த்திப்  பிடிக்கச் செய்தவர்  திருவள்ளுவர். வள்ளுவத்தில் இல்லாத வழிகாட்டல்களே இல்லை. வள்ளுவர் நாளான இன்று அவர் வகுத்தளித்த  வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்க உறுதியேற்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.

ramadoss

டிடிவி தினகரன், “ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொதுமறை என்று சொல்லத்தக்க வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய திருக்குறளைத் தந்திட்ட திருவள்ளுவரின் தினமாக இன்றைய நாளை கொண்டாடுகிறோம். திருக்குறள் காட்டும் உயர்ந்த நெறிகளோடு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வினை அமைத்துக் கொள்வோம். ஜெயலலிதாவின் கோரிக்கையான திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற நம்முடைய நெடுநாள் எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.” என்று  கூறியுள்ளார்.