மே 26ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

 
modi

பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 26ஆம் தேதி தமிழகம் வருகிறார். 

modi

மே 26ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.  தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தமிழகம் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

modi

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களை காணொலி வாயிலாகவும் தொடங்கி வைக்கவுள்ளார். மதுரை – தேனி இடையேயான அகல இரயில் பாதை திட்டம் முடிவுற்ற நிலையில் அதை தொடங்கி வைக்கும் பிரதமர், பெங்களூரு – சென்னை 4 வழி விரைவுச் சாலையின் 3ம் கட்ட பணிகள், சென்னையில் அமைய உள்ள மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா, மீன்சுருட்டி – சிதம்பரம் இடையிலான புதிய சாலை உள்பட ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையின்போது, அவரை சந்தித்து இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.